1974 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் பகிஸ்தானின் பிரதமர் சுல்பிகார் அலி பூத்தோ அவர்களின் அழைப்பின் பேரில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பகிஸ்தானுக்கான உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பகிஸ்தானின் மேல் சட்ட சபையையும் தேசீய சட்ட சபையையும் இணைந்த அமர்வின் முன் உரை நிகழ்த்தும் அரிய கௌரமும் பெற்றார். இவ்வாரன சந்தர்பம் இலங்கையிலுள்ள எந்த தலைவருக்குமே கிட்டியதில்லை. திருமதி பண்டாரநாயக்க கராச்சி பிரதேசத்துக்கும் சென்று அங்கு நடைபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.