1970 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த போப்பாண்டவர் போல் வி.ஐ வை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வரவேற்றார். இந்த விஜயம் இரத்மலான விமான நிலையத்திற்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவரொருவரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் விஜயம் என்பதால் இது மிகவும் முக்கியமானதாக அமைந்தது.