யுகோஸ்லோவியாவின் தலைவர் மார்ஷல் ஜோஸப் பரோஸ் டிடோ அணிசேரா மாநாட்டின் தலைமைத்துவத்தை கயிரோவில் எகிப்த்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார்யிடம் ஒப்படைத்தார். மகாநாட்டில் பேசிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் விரைவாக மாறிவரும் உலக நிலமைகளுக்கு ஏற்றவாரு அணிசேரா இயக்கத்திற்கு புதிய சொற்பொருள் விளக்கமும் செய்கடமைகளின் தேவையையும் எடுத்துறைத்தார். “வல்லரசு பிரிவுகளிடத்தில் சிக்காமல் விலகி நிற்பதே அணிசேரா கொள்கையின் திடமான நோக்கமாக இருந்தது. வல்லரசுகளளுடைய உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பொறுத்த வரையில், அணிசேரா கொள்கையின் சொற்பொருள் விளக்கமும் செய்கடமைகளையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை உண்மையாகவே உருவாகியுள்ளது.” இவருடைய இந்த யோசனைக்கமைய கயிரோ மகாநாட்டில் இரண்டு தீர்மாணங்கள் எடுக்கப்பட்டது. ஒன்று உலக சமுத்திர பிரதேசங்களை உள்ளடக்கிய அணுஆயுதமற்ற மண்டலம் அமைப்பது. இரண்டாவதாக, வல்லரசுகள் இந்திய சமுத்திரத்தில் களம் அமைத்து பராமரிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை முற்று முழுதாக கண்டனம் செய்தலாகும். அதன் பின்பு, 1964 அம் ஆண்டு நவெம்பர் மாதம் 10 திகதி கயிரோ பிரகடனத்தை செனட் சபையில் சமர்ப்பித்து வழிமொழியப்பட்டதுடன் பின்பு இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின் இது முக்கிய அம்சமாகியது.