1965 ஆண்டில் நடத்திய பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்த பின், அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் 16,500 அதிகபடியான வாக்குகளால் வெற்றி பெற்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் எதிர் கட்சியில் அமர்ந்தார். இதனூடாக இவர் எதிர் கட்சி தலைவர் பதவி வகிக்கும் முதல் பெண்மனி என்ற முதல் ஸ்தானத்தையும் அடைந்து 1970 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கும் வரை ஆறாவது பாராளுமன்றத் கால பகுதி முழுவதும் எதிர் கட்சி தலைவராக இருந்தார்.