அரசியலமப்பின் படி, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக பதவியேற்று மூன்று மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் அல்லது செனட் சபை என்ற மேல் சட்ட சபையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். இதன் பிரகாரம், இளைய உறுப்பினரான எம்.பி.டி. சொயிஸா அவர்கள் மேல் சட்ட சபையில் அவரது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களை நியமிக்க வழிசெய்தார்.