இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் அதிகாரம் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனமான இலங்கை பெற்றோலியக் கூட்டுஸ்தாபனத்துக்கு வழங்குவதற்கு 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தீர்மானம் எடுத்தார். வெளிநாட்டு செலாவனியை பேணுவதற்கு திருப்திகரமான பொறிமுறையொன்று இல்லாதமைனாலும் தடங்கலின்றி எரிபொருள் வழங்களை உறுதி செய்யும் முகமாகவும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கிணங்க 1963 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலியம் கூட்டுஸ்தாபன சட்டம் 1963 ஆம் ஆண்டு அகஸ்ட் 22 ம் திகதி இயற்றப்பட்டது. 1964 ஆம் ஆண்டு ஜனவரி 01 ம் திகதி முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுஸ்தாபனம் எரிபொருள் இறக்குமதி மற்றும் வினியோகிக்கும் அதிகாரம் கொண்ட நாட்டின் ஒரே நிறுவனமானது.