திருமதி பண்டாரநாயக்க அவர்கள் எதிரனியில் இருந்து கொண்டு ஆதரவை ஒன்றுதிரட்டும் நோக்கோடு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான பொது உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1956 ஆம் ஆண்டில் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ர்.டி. பண்டாரநாயக்க அவர்களினால் அறிமுகப்படுத்திய முற்போக்கான கொள்கைகளை அமுல்ப்படுத்தும் நோக்கோடு இந்த மூன்று கட்சிகளும் ஒன்றாக இயங்கின.