லுசாகாவில் நடத்திய அணிசேரா இயக்கத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் தலமைத்துவத்தை எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார் அவர்களிடமிருந்து ஜனாதிபதி கெனத் கௌன்டா ஏற்றுக்கொண்டார். இலங்கையின் தூதுக்குழுவுக்கு தலமைதாங்கிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வல்லரசு சார்ந்த கட்சிகளிடம் வரும் பொருளாதார ரீதியாகவோ இரானுவ ரீதியாகவோ வரும் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமது எதிர்பை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட “அனிசேரா கொள்கைகளை பின்பற்ற முயலும் எனது நாட்டை போன்ற சிறிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல வித அழுத்தங்கள், பயமுறுத்தல்கள் மற்றும் சோதனைகளுக்கு உள்ளாக்கபடுகின்றன. எவ்வாறாயினும், அணிசேரா கொள்கையும் எல்லா நாடுகளுடனும் நட்புடன் நடந்துகொள்ளும் கொள்கையே புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான சிறந்த கொள்கையாகும். எங்கள் மாநாட்டின் பங்குகொள்பவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது உலகத்தின் அரைவாசி பேர் அணிசேரா கொள்கையினை புரிந்து கொண்டுள்ளதை தெளிவாகுகின்ற அதேசமயம் சர்தேச அரசியில் விவகாரங்களில் கடைபிடிக்க பொருத்தமான கொள்கையாக அணிசேரா கொள்கையினை மதிக்கின்றன.” இந்த மாநாட்டின் முக்கிய அம்சம் என்னவெனில் சமாதான மண்டலம் அமைக்க வேண்டுமென கோரிக்கையை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் விடுத்ததாகும். இதனூடாக, அணிசேரா நாடுகளின் காணி, ஆள்புல நீர்ப்பரப்பு மற்றும் வான்வெளி பரப்பை வல்லரசுகளின் போட்டிகளுக்கோ சண்டைகளுக்கோ இடமளிக்க படமாட்டாது.