• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

10 டிசம்பர் 1962 – ஆறு நாடுகளின் கொழும்பு மாநாடு

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவிய பதற்ற சூழ்நிலையை பின்தொடர்ந்து, ஆசிய கண்டத்திலுள்ள இந்த இரு வல்லரசுகளிடையே நிலவும் முரண்பாடுகளுக்கு முடிந்தளவில் ஒரு தீர்வு காணும் பெருட்டு பர்மா, கம்போடியா, ஈஜிப்ட், கானா, மற்றும் இந்தோநேசியா போன்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றுகூட்டி திருமதி பண்டாரநாயக்க அவர்கள் கொழும்பிலே ஒரு மகாநாட்டை நடத்தினார். பின்னர், இதை கொழும்பு மாநாடு என்றும் அழைக்கப்பட்டது. இந்தியா இந்த மாநாட்டின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், சீனா பேச்சுவார்தை ஆரம்பிப்பதற்கு இது அடித்தளமாக அமையுமென கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது.