அனைத்துலக மகளிர் வருடத்தில் நடைப்பெற்ற உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தொடரிலே பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மனித முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை பற்றி மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். பொதுச்சபையில் பிரதான உரையை நிகழ்த்திய அவர், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் அகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாக புதிய அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். சுவிட்ஸார்ந்தில் தங்கியிருந்த பொழுது 77 குழுவு முன்னிலையிலும் உரை நிகழ்த்தினார்.