பிரேக் நகரக்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் செக்கொஸ்லோவேக்கியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்தித்து இன்னும் காலணித்துவ ஆதிக்கதுக்கு அகப்பட்டு அதற்கு எதிராக பேராடும் நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான பிரச்சிணையில் தேவைபடும் கூட்டொருமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பவற்றை ஆராய்ந்தார். வர்தக மற்றும் வணிகதுறை விடயங்களும் பேச்சு வார்த்தைகளின் போது இடம் பெற்றதுடன் இலங்கையின் ஏற்றுமதி பொருள்களும் செக் வர்தக சந்தைக்கு வருவதற்கு ஊக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.