திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனை பெற்றெடுக்கும் போது, சுகாதார மற்றும் தேசீய வைத்திய அமைச்சராக பணி புரிந்த எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்கள் அனுராதபுரையில் ஸ்ரீ மகா போதி அடியில் இருந்துள்ளார். இந்த பண்டைய கால தலைநகரின் பெயர் பிரகாரம் பெயரிடப்பட்ட அனுர பிரியதர்ஸி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க தனது பெற்றோர்களின் வழியில் சென்று அரசியலுக்கு பிரவேசித்து முதல் முறையாக 1977 ஆம் ஆண்டில் நுவரெலியா–மஸ்கெலியா தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றார். இவருடைய அரசியல் வாழ்கையில், 1983 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை எதிர் கட்சி தலைவராகவும், 11 வது இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் கடமையாற்றிய இவர், வெளி விவகாரம், கைத்தொழில் மற்றும் முதலீடு மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2008 மார்ச் மாதம் 16 ம் திகதி இவர் காமாலமானார்.