உலக அரங்கில் அவருடைய இருத்தலை பதியச் செய்து கொண்டு, பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட 11 வது பொதுநலவாய பிரதமர்களின் மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றார். ஒரு பெண் அரச தலைவர் பங்கு பற்றும் முதல் பொதுநலவாய பிரதமர்களின் மகாநாட்டிலே ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஹறல்ட் மாக்மிலன், இந்தியாவின் ஜவஹல்லால் நேரு, பகிஸ்தானின் அயுப் கான், ஒஸ்றேலியாவின் ரொபட் மென்சீஸ், சயிபிரசின் ஆர்ச்பிசொப் மகாரியோஸ் ஐஐஐ, கானாவின் க்வாமே நக்ருமா, மலேசியாவின் துன்கு அப்துல் ரகுமான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துணர்வுடன் செயற்பட்டார். இந்த தலைவர்களுடன் உலக விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுதுடன், தென் ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கைகள் சம்பந்தமாகவும், பிரித்தானியாவின் பொதுச் சந்தைக்கு பிரவேசித்தல் சம்பந்தமாகவும், பொதுநலவாய நாடுகளுக்கு அதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதையும் சயிபிரஸ் மற்றும் சியரா லியன் என்பன இந்த அமைப்புக்கு பிரவேசித்தல் பற்றியும் இந்த மகா நாட்டிலே ஆராயப்பட்டது.