• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

17 மே மாதம் 1973 – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபம் அங்குராபனம்

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தை திருமதி பண்டாரநாயக்க, ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ, சீன அரச சட்ட சபையின் உப தலைவர் மாஷல் ஹ்சு ஹியாங்-சியென், சீன அரசாங்க தூதுவர் மற்றும் இலங்கையையும் சீனாவையும் பிரதிநிதித்துவ படுத்தி இரண்டு தொழிளாலர்கள் முன்னிலையில் வைபவ ரீதியாக அங்குராபனம் செய்யப்பட்டது. 1973 ஆம் அண்டு மே மாதம் 17 ஆம் திகதி பி.ப.3.55 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தின் சாவியை தாம்பாளத்தில் வைத்து சீன அரசாங்க தூதுவரினால் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கைளிக்கப்பட்டதுடன் அதை அவர் மண்டபத்தின் நிருவாகியிடம் ஒப்படைத்தார். இந்த அங்குராபன நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், “இந்த தலைசிறந்த அன்பளிப்புக்கு” சீன அரசாஙகத்திற்கு நன்றியை தெரிவித்ததுடன் “இந்த மண்டபத்தினூடாக பிரதமர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க அவர்களின் சர்வதேசமயம் மற்றும் சகோதரத்துவம் பற்றி அவர் வைத்திருந்த நம்பிக்கையை பிரதிபலிக்கின்ற அதேவேலை உலக நாடுகளுக்கு இலங்கை ஓர் சந்திக்கும் தளமாக அமைய வேண்டுமென்ற அவரின் ஆவாவைக்கு நிரந்தரமான கருத்துருவம் பெரும்” என்றும் தாம் நம்புவதாக கருத்து தெரிவித்தார். சுகவீனம் காரணமாக பிரதமர் சௌ என் லாயி வைபவத்திற்கு சமூகளிக்க முடியாமல் போனாலும் 1963 ஆம் ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுத்தான் இந்த மண்டபத்தை அமைப்பதை பற்றிய யோசனையை முதல்முதலில் முன்வைக்கப்பட்டது. 37 ஏக்கர் காணி பரப்பில் அமைந்திருக்கும் இந்த மண்டபம் இலங்கைக்கும் சீனாவிக்கும் இடையே நிலவும் திடமான நட்பின் சின்னமாக விளங்குகிறது.