திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முதல் தெரிவின் பதினைந்து வருடங்களுக்கு பின் மெக்ஸிக்கோவில் நடைப்பெற்ற ஐக்கிய நாடு சபையின் பெண்கள் சம்பந்தமான அனைத்துலக மாநாட்டில் உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வகையில் பிரதம உரையை நிகழ்த்தினார். “இங்கு நாங்கள் வேற்றுமைகளை அகற்றுவதில் மாத்திரமின்றி மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு புறக்கணிக்கப்பட்ட மனித இனத்தின் அரைவாசி பேர்களுடைய பங்களிப்பபையும் ஒன்றினைப்பதில் செயற்பட்டுவருகின்றோம்” என்று பெண்களின் பாத்திரத்தையும் அவர்களுடைய பங்களிப்பை பற்றியும் பேசிய பொழுது திருமதி பண்டாரநாயக்க அவர்கள் கருத்து தெரிவித்தார். மெக்சிகோ ஜனாதிபதி லுவிஸ் ஏச்சேவேரியா அல்வாரெஸ் மற்றும் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, இலங்கையின் கறுவா பட்டையை அதிக அளவில் கொள்வனவு செய்வதற்கு மெக்சிகோவின் இணக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.இங்கு தங்கிருந்த காலத்தில் சுவிஸ் பிரதமர் ஓலொப் பால்மே மற்றும் வின்வெளிக்கு சென்ற முதல் ரஸ்ய விண்வெளி வீராங்கனையான வெலன்டினா டெரஸ்கோவாவையும் சந்தித்தார்.