29 ஜூன் 1945 – சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு
பண்டாரநாயக்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவும் “வெண்ட்வோர்த்” இல்லத்தில் பிறந்தார். பாரிஸ் நகரின் சோபோர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்ற சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்க, இலங்கைக்கு திரும்பிய பின்பு நாட்டின் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பொறுப்பேற்றார். மேற்கு மகாணத்தின் முதலமைச்சராகவும், பிறகு பிரதமராகவும் அதன் பின்பு இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்ட சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்க, இலங்கையில் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை பெற்றார்.