Monthly Archives: ஜனவரி 1971

25 ஜனவரி 1971 – கனேடிய பிரதமர் பியரே றுடோவின் விஜயம்

கனேடிய பிரதமர் பியரே றுடோ இலங்கைக்கு மேற்கொண்ட நான்கு நாள் விஜயம் கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலேயான உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நட்பு அவருடைய ஆட்சி காலம் பூராவும் நிலவியது. பொதுநலவாய நாடுகளுடையே இலங்கைக்கு நன்மதிப்பு இருந்ததுடன் இரண்டு மொழிகளையும் நான்கு சமயங்களையும் கொண்ட இலங்கை கன்டாவிக்கும் கியுபெக் நாட்டுக்கும் நல்ல உதாரனம் என கனேடிய பிரதமர் பாராட்டினார்.

14 – 22 ஜனவரி 1971 – சிங்கபூரில் நடைப்பெற்ற முதல் பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு

பொதுநலவாய பிரதமர்களுடைய மாநாடுக்கு பதிலாக ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடுக்கு முதல் முறையாக சமூகமளித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுத்திரததை சமாதான மண்டலமாக உருவாக்கும் அவரது அலோசனையை மீண்டும் தெளிவாக எடுத்துறைத்தார். சிங்கபூரில் கூடிய பொதுநலவாய அரச தலைவர்கள் ரொடேசியா மற்றும் தென் அப்பிரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனமாக ஆராய்ந்தனர்.