Monthly Archives: அக்டோபர் 1971

24 ஒக்டோபர் 1971 – ஐக்கிய இராஜ்ஜியதிற்கான விஜயம்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இங்கிலாந்து பிரதமர் எட்வட் ஹீத்தின் விருந்தினராக ஐக்கிய இராஜ்ஜியதிற்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வருடத்தில் முதல் பகுதியில் இளைஞர்களின் ஆயுத கிளச்சியை கையாளுவதற்கு ஐக்கிய இராஜ்ஜியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை நினைவுகூர்ந்து நன்றியையும் தெரிவித்தார். மகாராணி, பிரதமர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான இராஜங்க செயளாலர் சர் டக்லஸ் ஹோம் அவர்களையும் சந்தித்ததுக்கு அடுத்தபடியாக, ஐரோப்பா பொருளாதார சமுதாயதிற்கு பிரிட்டன் இணைந்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி பிரிட்டனின் பொது சந்தை சம்பந்தப்பட்ட

21 ஒக்டோபர் 1971 – கனடாவிற்கான விஜயம்

ஐக்கிய நாடு பொது சபையில் ஏற்படும் பிரச்சினைகள், தெற்கு ஆசியாவில் கொதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கைக்கான கனேடிய உதவிகள் ஆகியவை பற்றி திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் கனேடிய பிரதமருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்களாகும். கனேடிய பிரதமர் பியரே றுடோ 1971 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு பரிமாற்றமாக இந்த விஜயமைந்தது. இந்த குறுகிய விஜயத்தின் போது கனேடிய வெளிவிவகார அமைச்சர் மிச்சல் ஸ்றாப் அவர்களையும் இலங்கை வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சந்தித்தார்.

20 ஒக்டோபர் 1971 – அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸனுடனான சந்திப்பு

ஐக்கிய நாடு பொது சபையில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வொஷிங்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொன்டார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸனுடனும் இராஜாங்க அமைச்சர் விலியம் ரொஜர்வுடனும் இருதரப்பு விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்தை நடத்தியதோடு அமெரிக்க முதல் பெண்மனியால் விருந்துமளிக்கப்பட்டார். உப ஜனாதிபதியாக கடமையாற்றும் போது 1953 ஆம் ஆண்டிலே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸன் இலங்கை மீது மிகவும் அக்கறையுள்ளவராக காணப்பட்டார்.

12 ஒக்டோபர் 1971 – ஐ.நா.பொ.சபை – சமாதான மண்டலம்

1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடு பொது சபையின் 26 வது அமர்வில் கலந்து கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுதிரத்தை சமாதான மண்டலமாக பிரகடனம் செய்ய வேண்டுமென முன்மொழிந்தார். ஐக்கிய நாடு பொது சபையின் செயளாலர் நாயகமாகிய திரு. யு தானுடனும் இது சம்பந்தமான விடயங்களை அவருடன் நடத்திய பேச்சுவார்தையின் போது ஆராயப்பட்டது. இலங்கையும் டன்சானியாவும் இணைந்து கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இன்னும் பல நாடுகள் ஆதரித்ததுடன் பரவலாக மிகுந்த ஆதரவு