திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் காணி உடைமையாளர்கள் ஒத்துப்போகா விட்டால் காணிகளை பறிமுதலாக்கும் அச்சுறுத்தலோடு வைத்துக்கொண்டிருக்கும் காணிகள் சம்பந்தமாக உற்பத்தி தரத்தை வரையறுக்கும் நோக்கோடு விவசாய உற்பத்தித் திறன் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் பயிர்ச்செய்கை செயற்குழுகளை நீக்கி, விவசாய உற்பத்தித் திறன் செயற்குழுக்களை பயிர்ச்செய்கை செய்யக்கூடிய காணிகளை உரிய முறையிலும் திறனான முகாமைத்துவத்திணூடாகவும் உயர்ந்தபட்ச உற்பத்தித் திறனை அடையும் நோக்கோடு உருவாக்கியது.