நாட்டின் காணிகளுக்கும் ஜீவனோபாயத்திற்கும் நிலவும் கிராக்கியை இனம்கண்டு, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். காணிகளை மீளபங்கீடு செய்வதற்கு பொறுப்பளிக்கப்பட்ட ஆனைக்குழு ஒரு நபருக்கு 50 ஏக்கர் காணி உச்ச வரம்புடனும் ஒரு குடும்பத்தினால் சொந்தமாக வைத்திருக்க முடியும் வீடுகளின் எண்ணிக்கையிலும் கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஏற்பாடுகடாக 5,500 காணி உடைமையாளர்களுக்கு சொந்தமான 400,000 ஏக்கர் காணிகள் பங்கீடு செய்வதற்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மட்டும் பண்டாரநாயக்க மற்றும் ரத்வத்தே குடும்பத்தினருக்கு சொந்தமான 2,500 ஏக்கர் காணிகளை காணி சீர்திருத்த நடவடிக்கை மூலம் இழந்தார்.