Monthly Archives: ஜனவரி 1972

21 ஜனவரி 1972 – அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தை ஸ்தாபித்தல்

காட்சி திரையும் மேடை நாடகங்களும் மட்டும் பொழுதுபோக்காக இருந்த காலக்கட்டத்தில் உள்நாட்டுத் திரைபடத் தொழில்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முயற்சியின் காரணமாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்துறைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக்கொண்டு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. மேலும் கடன் திட்டங்களை அமுல் படுத்தியதுடன் திரைப்படங்கள் விணியோகம் சம்பந்தமான முறைகளை ஏற்படுத்தி ஓர் உயர்மட்ட திரைப்படத்தொழில் துறையை ஸ்தாபித்தது.

1972 – விவசாய உற்பத்தித்திறன் சட்டம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் காணி உடைமையாளர்கள் ஒத்துப்போகா விட்டால் காணிகளை பறிமுதலாக்கும் அச்சுறுத்தலோடு வைத்துக்கொண்டிருக்கும் காணிகள் சம்பந்தமாக உற்பத்தி தரத்தை வரையறுக்கும் நோக்கோடு விவசாய உற்பத்தித் திறன் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் பயிர்ச்செய்கை செயற்குழுகளை நீக்கி, விவசாய உற்பத்தித் திறன் செயற்குழுக்களை பயிர்ச்செய்கை செய்யக்கூடிய காணிகளை உரிய முறையிலும் திறனான முகாமைத்துவத்திணூடாகவும் உயர்ந்தபட்ச உற்பத்தித் திறனை அடையும் நோக்கோடு உருவாக்கியது.

1972 – காணி சீர்த்திருத்தச் சட்டம்

நாட்டின் காணிகளுக்கும் ஜீவனோபாயத்திற்கும் நிலவும் கிராக்கியை இனம்கண்டு, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். காணிகளை மீளபங்கீடு செய்வதற்கு பொறுப்பளிக்கப்பட்ட ஆனைக்குழு ஒரு நபருக்கு 50 ஏக்கர் காணி உச்ச வரம்புடனும் ஒரு குடும்பத்தினால் சொந்தமாக வைத்திருக்க முடியும் வீடுகளின் எண்ணிக்கையிலும் கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஏற்பாடுகடாக 5,500 காணி உடைமையாளர்களுக்கு சொந்தமான 400,000 ஏக்கர் காணிகள் பங்கீடு செய்வதற்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மட்டும் பண்டாரநாயக்க மற்றும் ரத்வத்தே