Monthly Archives: ஜனவரி 1974

24 ஜனவரி 1976 – தாய்லந்திற்கான விஜயம்

கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவருடைய தூதுக்குழுவும் பாங்கொக் நகரை வந்தடைந்தது. பிரதமர் குக்ரிட் பிரமாஜான்ட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சட்டிசாய் சூன்ஹவான் அவர்களுடன் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்திய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மண்ணர் பூமிபொல் ஆடுல்யாடேஜ், ராணி சிரிகிட் மற்றும் அரச குடும்பத்தின் மற்றைய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது சந்தித்தார். மேலும் சியாங்மாய் நகருக்கும் விஜயம் செய்தார்.

22–29 ஜனவரி 1974 – இந்தியாவின் குடியரசு தினத்திற்கு பிரதம விருந்தினராக பங்கேற்றல்

1974 ஆம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்க அவர்களை யுகொஸ்லோவியாவின் ஜனாதிபதி ஜோஸப் டிடோ சகிதம் இந்தியாவின் குடியரசு தினத்திற்கு பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டது. உலக தலைவர்களை அழைத்து குடியரசு தினத்தில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுடன் சிறபிக்கும் ஓர் சரித்திர நிகழ்ச்சி நிரலில் பங்குபற்றும் இந்த அரிய சந்தர்ப்பமும் கௌரவமும் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்திலேயே கிட்டியது.