10 நவெம்பர் 1974 – சோவியட் யூனியனுக்கும் ஜோர்ஜியாவிற்கான விஜயம்
1974 ஆம் ஆண்டில் நவெம்பர் மாதம் சோவியட் யூனியனுக்கும் ஜோர்ஜியாவிற்கும் விஜயம் மேற்கொண்டு டஸ்கென்ட், மொஸ்கௌ மற்றும் திபிலஸி போன்ற நகரங்களுக்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் கொஸிஜின் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அன்றோ கொரம்கியோ அவர்களை சந்தித்த திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இந்த விஜயம் மூலம் இரு நாடுகளுடைய உறவுகள் மேலும் வலுவடைந்துடன் சோவியட் யூனியன் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் அவருடைய தூதுக்குழுவுக்கும் மொஸ்கௌவுக்கு வந்து சென்றடைவதற்கு விஷேட விமானம் ஒன்றும் அனுப்பி வைத்தது.