Monthly Archives: ஏப்ரல் 1975

29 ஏப்ரல் 1975 – ஜெமைக்காவில் மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு

பிரதமர் மைகல் மான்லியால் வரவேற்று உபசரிக்கப்பட்டு ஜெமைக்காவில் நடத்திய மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு உலகத்தின் கவனம் வியட்னாம் யுத்தத்தை பற்றி கவனம்செலுத்திக் கொண்டிருக்கும் ஓர் கால கட்டத்தில் நடைப்பெற்றது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்த அமர்வின் போது மற்ற தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் இந்திரா காந்தி, பிரித்தானியாவின் ஹரல்ட் மக்மிலன், சிங்கப்பூரின் லீ குவான் யு மற்றும் பங்களாதேசின் முஜிபர் ரஹ்மான் போன்றுடன் இணைந்து செயற்பட்டார்.

28 ஏப்ரல் 1975 – இராக்கிடமிருந்து எண்ணெய்களுக்கான சலுகைகள்

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொதுநலவாய அமர்வுக்கு ஜெமைக்காவுக்கு செல்லும் வழியில் பக்தாத் நகரில் நான்கு நாள் தங்கிருந்தார். பெற்றோலியம் பொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் இயக்கம் எரிபொருளின் விலையை அதிகளவில் உயர்த்தியுள்ள நிலையில் இலங்கை போன்ற நாடுகள் இதன் தாக்கத்தில் பாதிக்கபட்டுள்ள பின்னணியில் தான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்கூறிய விஜயத்தை மேற்கொண்டார். உப ஜனாதிபதி சதாம் ஹுசெயினுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது, விலை உயர்வால் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை திருமதி பண்டாரநாயக்க அவர்கள்