14 நவெம்பர் 1994 – ஜனாதிபதி தேர்தல்
பொதுத் தேர்தல் நடப்பெற்று சில மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் 1994 நவெம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 62% வாக்குகளை பெற்று அமோக வெற்றி ஈட்டியதுடன் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து ஜனாதிபதியாக பதவியேற்றார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராஜினாமா செய்யும் வரை இந்த பதவியை வகித்தார்.