ஐக்கிய நாடு பொது சபையில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வொஷிங்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொன்டார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸனுடனும் இராஜாங்க அமைச்சர் விலியம் ரொஜர்வுடனும் இருதரப்பு விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்தை நடத்தியதோடு அமெரிக்க முதல் பெண்மனியால் விருந்துமளிக்கப்பட்டார். உப ஜனாதிபதியாக கடமையாற்றும் போது 1953 ஆம் ஆண்டிலே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ரிசட் நிக்ஸன் இலங்கை மீது மிகவும் அக்கறையுள்ளவராக காணப்பட்டார்.