10 ஆகஸ்ட் 2000 – பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தல்
சுகயீனம் காரணமாக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலகியிருக்க விருப்பபட்டார். 84 வயதில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் போது அவர் உலகத்திலேயே அதிக வயதுடைய பிரதமராக இருந்ததுடன் அவருடைய நான்கு தசாப்த அரசியல் வாழ்கை முடிவுக்கு வந்தது. இந்த காலத்தினுள் அவர் அரசியலில் உச்ச நிலையடைந்து மூன்று முறை பிரதமர் பதவியைடைந்ததுடன் இரண்டு முறை எதிர்கட்சி தலைவராகவும் கடமையாற்றினார்.