• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

21 – 28 ஒக்டோபர் 1963 – சோவியத் யூனியனுக்கான விஜயம்

பனிப்போர் காலத்தினுள் இரண்டு வல்லரசுகளிடமும் தொடர்பு கொள்ளும் போது பயனுள்ள அணுகுமுறையை நடைமுறை படுத்தும் கொள்கையை பின்பற்றி, இரண்டு நாடுகளிடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தவும் தான் பதவியேற்ற பின் மூன்று வருடங்கள் போன்ற குறுகிய கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேலும் தொடரும் நோக்கத்தோடும், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மொஸ்ககொள்வுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொன்றார். சோவியட் யூனியனுக்கு விஜயம் செய்யும் முதல் இலங்கை பிரதமர் என்ற வகையில், பிரதமர் நிகிட்டா குறுநெப் உடன் விரிவான பேச்சுவார்தை நடத்தி இலங்கைக்கான எரிபொருள் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளவும் வெற்றிகண்டார். 1964 ஆம் ஆண்டு ஜனவரி 01 அம் திகதி முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகம் முழுமையாக இலங்கை பெற்றோலியக் கூட்டுஸ்தாபனம் பொறுபேற்கவுள்ளதால் பெருமளவில் கொள்வனவு செய்யும் இந்த நிறுவனம் ஊடாக இலங்கைக்கு பெரும் நன்மை கிட்டும். “நட்பு விஜயம்” என வர்ணிகக்ப்பட்ட இந்த விஜயத்துக்கு சோவியட் மக்கள் மிகவும் குதூகலமாக வரவேற்பளித்தனர். மொஸ்கௌவ் நகரில் அரச சடங்கொன்றில் பேசிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் “இந்த விஜயத்தை திரு.பண்டாரநாயக்க அவர்களே மேற்கொள்வதற்க்கு உத்தேசித்திருந்தபோதுதான் அவரின் துக்ககரமான படுகொலை நடந்தது. இருப்பினும், நாங்கள் இருவரும் விரும்பிய ஓர் இடத்தை எனக்கு நிறைவேற்ற கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.