காட்சி திரையும் மேடை நாடகங்களும் மட்டும் பொழுதுபோக்காக இருந்த காலக்கட்டத்தில் உள்நாட்டுத் திரைபடத் தொழில்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, திருமதி பண்டாரநாயக்க அவர்களின் முயற்சியின் காரணமாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்துறைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக்கொண்டு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. மேலும் கடன் திட்டங்களை அமுல் படுத்தியதுடன் திரைப்படங்கள் விணியோகம் சம்பந்தமான முறைகளை ஏற்படுத்தி ஓர் உயர்மட்ட திரைப்படத்தொழில் துறையை ஸ்தாபித்தது.