1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலான 1977 தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றுமில்லாதபடியான தோல்வியை கண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனஙகளை மட்டும் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அத்தனகல்லை தொகுதியில் மிக சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே வென்றார்.