ஐக்கிய நாடு பொது சபையில் ஏற்படும் பிரச்சினைகள், தெற்கு ஆசியாவில் கொதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கைக்கான கனேடிய உதவிகள் ஆகியவை பற்றி திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் கனேடிய பிரதமருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்களாகும். கனேடிய பிரதமர் பியரே றுடோ 1971 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு பரிமாற்றமாக இந்த விஜயமைந்தது. இந்த குறுகிய விஜயத்தின் போது கனேடிய வெளிவிவகார அமைச்சர் மிச்சல் ஸ்றாப் அவர்களையும் இலங்கை வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சந்தித்தார்.