தென் அப்பிரிக்காவின் இனவெறிக் கொள்கைகளுக்கு தனது கடினமான எதிர்பை தெரிவித்துள்ள திருமதி பண்டாரநாயக்க அவர்கள், செனட் சட்ட சபையில் பேசும் போது, “ நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால் இவ்வாரான தடைகள் பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் உலகத்தின் எல்லா நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களை போன்ற சிறிய நாடுகள் மட்டும் இவ்வாரான கொள்கையை தன்னிசையான முன்னெடப்படுப்பது ஒரு சமிக்கையாக மட்டும் அமையுமேயொளிய ஒரு பயனுள்ள நடவடிக்கையாக அமையாது.” என்று கூறினார். நெல்சன் மெண்டலாவை ஒருபோதும் சந்தித்திருக்காவிட்டாலும் அவர்க்கும் தென் அப்பிரிக்காவிலிருந்து இனவெறிக் கொள்கையை இல்லாதொளிக்கும் அவருடைய போராட்டத்திற்க்கு ஆதரவை தெரிவித்திருந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள், சர்வதேச அரங்கில் பல தடைவ இது சம்பந்தமான தனது அக்கறையை வெளிபடுத்தியுள்ளார். நெல்சன் மெண்டலா தனது விடுதலையின் பின், தனது நீண்டதும் கடினதுமான போராட்த்தின் போது திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அளித்த ஆதரவை அடிக்கடி நினைவு கூறினார். தான் சிறையில் இருக்கும் போது திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்து அனுப்பிய கடிதங்களை பாராட்டியதுடன் தனது போராட்டத்துக்கு சார்பான இலங்கையின் நிலையினை மிகவும் மதிப்பளித்தார்.