திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேரு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயம் மிக முக்கியமானது ஏனெனில் நாவின்னயில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டதும் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நிகழ்ச்சியாகும். இந்திய சீன உறவில் ஒரு பதற்றம் நிலவிய கால பகுதியாக இருந்தும் கூட இந்த இரு நிகழ்ச்சி நிரலுக்கும் இணங்கி இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். ஜவஹல்லாற் நேரு மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கிடையே நிலவிய நெருங்கிய உறவின் பிண்ணனியில், ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம் எஸ்.டபிள்யூ.ர்.டி.பண்டாரநாயக்க பெயரில் அமையுள்ளதால் அழைப்பை உடன் ஏற்றுக்கொண்டார்.