கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவருடைய தூதுக்குழுவும் பாங்கொக் நகரை வந்தடைந்தது. பிரதமர் குக்ரிட் பிரமாஜான்ட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சட்டிசாய் சூன்ஹவான் அவர்களுடன் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்திய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மண்ணர் பூமிபொல் ஆடுல்யாடேஜ், ராணி சிரிகிட் மற்றும் அரச குடும்பத்தின் மற்றைய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது சந்தித்தார். மேலும் சியாங்மாய் நகருக்கும் விஜயம் செய்தார்.