• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

24 ஜூன் – 05 ஜூலை 1972 – சீனாவிக்கான உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு சென்றடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை சீன தலைவர் மா ஓ சேதுங், பிரதமர் சௌ என்-லாய் மற்றும் மூத்த சீன தலைவர்களால் மிகவும் பிரியமாக வரவேற்கப்பட்டார். சீன தலைவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான பேச்சுவார்தைகளை நடத்திய அவர், அவரது அரசாங்கத்தின் ஐந்தாண்டு திட்டம் பற்றி விளக்கமளித்தார். இவரது இந்த முயற்சி கைகூட, சீன அரசாங்கம் உடனடியாக வட்டியற்ற கடணொன்றை நீண்டக்கால அடிபபடையில் வழங்கியது. சர்வதேச உறவுகளை பொறுத்த வரையில், இந்துசமுத்திரம் சமாதான மண்டலமாக பிரகடனபடுத்த வேண்டும் என்ற திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அலோசனையில் உறுதியாக இருந்தார். இந்த யோசனையை சீனா முழுமையாக வரவேற்றது. இந்தோனோசிய, பலஸ்தீனம் மற்றும் தெற்கு ஆசிய கண்டத்திலுள்ள நிலமைகள் பற்றியும் பேசப்பட்டது. சென்யேங், டாலியன் மற்றும் ஷங்ஹயி போன்ற பிரதேசங்களுக்கும் திருமதி பண்டாரநாயக்க விஜயம் செய்தார்.