1964 ஆண்டு சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயத்தின் போது பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பன்டாரநாயக்க அவர்களின் ஞாபகார்த்தமாக சர்வதேச மாநாடு மண்டபம் ஒன்றை நிர்மானிக்க கொடுத்த வாக்குறிதிக்கமைய, இந்த மண்டபத்தின் நிர்மான வேலைகளை ஆரம்பிக்கும் மாபெரும் விழா 1970 ஆம் ஆண்டு நொவெம்பர் 24 அம் திகதி திருமதி பண்டாரநாயக்க, ஆளுனர் விலியம் கொபல்லாவ மற்றும் அமைச்சரவை முன்னிலையில் நடைப்பெற்றது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபம் என பெயரிடப்படவுள்ள இந்த மண்டபத்தின் நிர்மான வேலைகள் ஆரம்பிக்கும் முதல் கட்டத்தில் திருமதி பண்டாரநாயக்க, அமைச்சரவையின் அங்கத்தவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சிரமதான நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றினர். எதிர்பார்க்கப்பட்ட கால எல்லைக்கு நான்கு மாதத்துக்கு முன்பே நிர்மான வேலைகளை பூர்த்தி செய்யப்பட்ட இந்த கட்டிடம், நாட்டின் கட்டிடக்கலை வடிவமைப்புகளுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.