திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இரண்டாவது பிரதமர் முதல்கால பகுதியில் அவரின் விருந்தினராக இலங்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் விஜயத்தை மேற்கொண்டார். ஊலகலாவிய சுற்று பயணத்தை ஆரம்பித்து முதலாவதாக கொழும்புக்கு வந்தடைந்த பிரதமர் லீ குவான் யூ அவர்கள் சில வாரங்கள் தங்கிருந்து திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் பல தரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக விரிவான பேச்சு வார்தைகளில் ஈடுபட்டார். இங்கு தங்கிருந்த காலப்பகுதியில் பேராதெனிய பல்கலைகழகத்துக்கும் விஜயம் செய்தார்.