1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ம் திகதி பிரதமர் எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க கொலைகாரன் ஒருவனால் முன்னைய தினம் அவரது “ டின்டஜெல்” இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதின் விளைவாக உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. பிரதமராகி மூன்று வருடங்கள் மட்டுமே ஆகிய நிலையில், 1951 ஆம் இவர் நிறுவிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தலைமை பதவிக்கு வெற்றிடம் நிலவியது. கட்சியின் மூத்த பிரமுகர்கள் நிலமையை சமாளிக்க முயற்சித்த பொழுதும், அது வெற்றி அளிக்காத நிலையில், தலைமை பொறுப்பு இளம் விதவையான சிறிமாவோ பண்டாரநாயக்க மேல் விழுந்தது. இதன் பலனாக, ஒரு அரசியல் கட்சியின் முதல் பெண் தலைவராக அரசியலுக்கு பிரவேசித்து சில மாதங்களுக்கு பின்பு சரித்திரம் படைத்தார்.