1962 ஆம் ஆண்டு ஜனவரி 27 ம் திகதி இரவில் முயற்சிக்கபட்ட சதித்திட்டத்தை சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையின் காரணமாக சதித்திட்டத்தை திட்டமிட்டவர்களை கைது செய்ததின் மூலம் முறியடிக்க முடிந்தது. பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விவகாரங்களுக்கான பாராளுமன்ற செயலாராக கடமையாற்றிய பிலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்களுடைய உதவியுடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களால் எடுத்த துரித நடவடிக்கைகளினால் சதியாளர்களை உடனடியாக கைது செய்தது மாத்திரமின்றி நாட்டின் ஜனநாயகத்தையும் சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற முடிந்தது.