• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

27 மார்ச் 1964 – இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் மரணம்

மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் மரணம் இந்தியாவையும் அவருடைய புத்திமதிகளையும் வழிகாட்டல்களையும் நம்பியிருந்த முழு அணிசேரா நாடுகளையும் அதிர்ச்சியில் ஆற்றியது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது பதவி காலப்பகுதியில் பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக பிரதமர் ஜவஹல்லாற் நேருடன் தொடர்ப்பு கொண்டுள்ளதோடு அணிசேரா இயக்கம் மற்றும் பொது நலவாய மகா நாடு ஆகியவை ஊடாக இருவர் இடையே நெருங்கிய உறவுகள் நிலவின. பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சி காலத்திலேயே முதல் முறையாக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரதமர் ஜவஹல்லாற் நேருக்கு அறிமுகமானார். டில்லியில் பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் இறுதி அங்சலி நிகழ்வில் கலந்துகொண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிராத்தானிய பிரதமர் சர் அலெக்ஸ் டக்லஸ் ஹொம், அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் டீன் ரஸ்க் மற்றும் ரஸ்யாவின் உதவி பிரதமர் அலெக்ஸி கொசிஜின் ஆகியோருடன் இணைந்துகொண்டார்.