மகாவலி கங்கையையும் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள வறட்சி மண்டலங்களை ஆய்வு செய்யும் நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டமொன்று 1961 ஆண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இது சம்பந்தமான பெருந்திட்டமொன்று 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை, ஐக்கிய நாடு சபையின் விஷேட நிதியம் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப் எ ஒ) அகியவற்றுடன் கைச்சாதிட்டச் செயல் திட்டத்தின் படி, நீர்பாசனம் மற்றும் நீர் மின் சக்தி ஆகியவைக்காக நீர் வளங்களை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான பெருந்திட்டத்தின் வேலைகள் 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று அரம்பிக்கப்பட்டது.