திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொதுநலவாய அமர்வுக்கு ஜெமைக்காவுக்கு செல்லும் வழியில் பக்தாத் நகரில் நான்கு நாள் தங்கிருந்தார். பெற்றோலியம் பொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் இயக்கம் எரிபொருளின் விலையை அதிகளவில் உயர்த்தியுள்ள நிலையில் இலங்கை போன்ற நாடுகள் இதன் தாக்கத்தில் பாதிக்கபட்டுள்ள பின்னணியில் தான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்கூறிய விஜயத்தை மேற்கொண்டார். உப ஜனாதிபதி சதாம் ஹுசெயினுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது, விலை உயர்வால் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் விரிவாக எடுத்துறைத்தார். இறுதியில், இராக் 250,000 தொன் எண்ணெய்யை நான்கு வருட தள்ளிவைக்கப்பட்ட கொடுப்பனவு முறையில் மிகவும் குறைந்த வட்டி வீதத்தில் கொடுப்பதற்கு தீர்மானித்ததுடன் இது வரவேற்ககூடியதாக இருந்தது.