• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

29 செப்டெம்பர் 1970 – எகிப்திய ஜனாதிபதி நஸார் அவர்களின் இறப்பு

அணிசேரா இயக்கத்தின் முக்கிய முன்னோடி பிரமுகரும் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் நெருங்கிய நண்பரான எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸாரின் இறுதிகிரியைக்கு பங்குபற்றுவதற்காக கயிரோ நகருக்கு சென்றார். இவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் லுஸாகா நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வைத்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸார் அணிசேரா இயக்கத்தின் தலைமைபீடத்தை ஜனாதிபதி கெனத் கௌன்டாவிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் சந்தித்தார். இதன்போது ரஸ்யாவின் பிரதமர் கொரிஜின், இத்தியொபியாவின் மன்னர் ஹேலி செலஸ்ஸி, சயிபிரசின அதிமேற்றிராணியார் மகாரியோஸ் ஐஐஐ, மற்றும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸர் அறபட் போன்ற பல உலக தலைவர்களை சந்தித்த திருமதி பண்டாரநாயக்க அவர்களுடன் திடமான நட்புறவை ஏற்படுத்திகொண்டார். அப்போது எகிப்தில் நிலவிய அச்ச உணர்வு காரணமாக, பாதுகாப்பை கருதி உலக தலைவர்கள் பல மரணசடங்குகளில் பங்குகொள்ள முடியாமல் இறுதி மரியாதையை மற்றும் செலுத்தினார்கள்.