• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

30 ஏப்ரல் 1962 – அமெரிக்க அணு பரிசோதனைக்கு எதிர்ப்பு

அணு குண்டுகளினால் ஹிரோசீமா மற்றும் நாகசாகி பிரதேசங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் அதன் பின்னர் பல தசாப்தங்களாக அனுபவித்த பயங்கர விளைவுகளையும் கருத்தில் கொண்ட இலங்கை, அமெரிக்காவினால் திட்டமிடப்படடிருந்த அணு சாதன பரிசோதனை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. “இவ்வாறான அணு சாதன பரிசோதனைகளை தடை செய்ய வேண்டுமென முழு உலகளாவிய ரீதியில் வேண்டுகோள் விடுத்திருக்கும் இக்கால கட்டத்தில் இருந்து கொண்டு தற்போது ஜெனிவாவில் நடைபெறும் இது சம்பந்தமான பேச்சுவார்தைகள் மீது உலக மக்களின் நம்பிக்கை தங்கிருக்கும் தருணத்தில், அணு சாதன பரிசோதனைகளை மீளத்தொடங்குதலானது சமாதானத்துக்கு பாரதூரமான பின்னடைவுகளை ஏற்படுத்தி மனித இனத்தை மீண்டுமொரு முறை அணு ஆயுத அழிவின் விளிம்புக்கு இட்டு செல்லும்” என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கெனடிக்கு கடிதம் எழுதினார் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள். “அனிசேரா கொள்கையுடைய இலங்கை போன்ற நாடுகள் ஆயுதக்குறைப்பு மற்றும் அணு சாதன பரிசோதனைகளை தடைசெய்வதற்க்கும் அர்பணித்துள்ள நிலையில், இந்நாடுகளின் கூட்டு எதிர்பார்ப்பை கவனத்தில் எடுக்காமல் இவ்வாறான அணு சாதன பரிசோதனை பற்றிய அறிவித்தலால் நாங்கள் அதிரச்சியடைந்துள்ளோம்” என அவருடைய கருத்தை அஞ்சாமல் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிவித்தார். ஜனாதிபதி கெனடி திருமதி பண்டாரநாயக்கவுக்கு பதிலளிக்கும் போது திருமதி பண்டாரநாயக்கவின் “ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகளின் போது அதன் செயற்பாடுகள் பற்றியும் பராமரிப்பு பற்றியும் ஒவ்வொரு கட்டத்திலும் பயனுள்ள முறையில் பரிசோதனையும் கட்டுப்பாடும் ஏற்படுத்த வேண்டும்” என்ற பெல்கிரேட் பேச்சை நினைவுகூறினார். “பயனுள்ள பரிசோதனையும் கட்டுப்பாடும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பற்றி எங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட இதன் தேவைப்பாடு சம்பந்தமாக எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.