அணிசேரா இயக்கத்தின் வெளிவிவகார அமைச்சர்களின் முதல் கூட்டம் 1972 ஆம் ஆண்டிலே அகஸ்ட் மாதம் கயானா நாட்டிலே ஜோர்ஜ்டவுனில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு முக்கியமாக இருந்தது ஏனெனில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அடுத்த உச்சி மாநாடு கொழும்பிலே நடாத்தபட வேண்டுமென முன்மொழிந்தபடியாகும். அதேநேரம் அல்ஜீரியா அடுத்த உச்சி மாநாட்டை அல்ஜியச்ஸில் நடாத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தது. கடைசியில், ஜோர்ஜ்டவுன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி தீர்மானங்களுக்கமைய 1973 ஆம் ஆண்டில் அடுத்த உச்சி மாநாடு அல்ஜீரியாவிலும் 1976 ஆம் ஆண்டு உச்சி மாநாடு கொழும்பிலே நடாத்தவும் தீர்மானிக்ப்பட்டது.