• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

21 ஜூலை 1960 – உலகத்தின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுத்தல்

பிரதமராக தேர்ந்தெடுத்ததின் மூலம் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற கௌரவத்தை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பெற்றறார். 1960 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறுதி பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி பீடம் ஏறியது. தேர்தல் முடிவுகள் அறிவித்தல் கிடைத்த தினம் மாலை 4.30 மணியளவில், ஆளுணர் சர் ஒலிவர் குணதிலக்கவின் இல்லத்தில் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் வைபவத்தில் வைத்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விடயங்கள் பற்றிய அமைச்சராகவும் கடமையாற்ற சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் தனது மறைந்த கணவரின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன் எடுப்பதற்க்கும் அவர் போராடிய சமதருமவாதி கொள்கைகளை அமுலுக்குக் கொண்டு வருவதற்கும் உறுதிமொழியளித்தார். இதுவானது பலரும் காலடி வைக்க தயக்கம் காட்டிய விடயங்களாக இருந்தாலும், இவருடைய வளர்ந்த பின்னணி, கணவரின் அரசியல் போக்கை பின்தொடரும் தைரியம் மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபட்ட தனது சொந்த அனுபவங்களும் இவருக்கு இந்த ஆற்றலுக்கு பயனுடையதாக அமைந்ததை பின் வரும் தசாப்தங்களில் காணலாம்.