சிறிமாவோ பண்டாரநாயக்க 1916 ஏப்ரல் 17 அன்று, சப்ரகமுவ பகுதியில் அளவிடக்கரிய சமூக ஆதிக்கத்தை அனுபவித்த, பாரம்பரிய கண்டிய உயர்ந்தோர் குழாத்திலான குடும்பமொன்றில், சப்ரகமுவ மாவட்ட அதிபரான (திசாவே) திரு.பான்ஸ் ரத்வத்த மற்றும் திருமதி மஹவலதென்ன குமாரிஹாமி ஆகியோரின் மூத்த பிள்ளையாகப் பிறந்தார். அவர் நான்கு சகோதரர்களையும், இரு சகோதரிகளையும் கொண்டிருந்ததுடன், கொழும்பில் சென்ற் பிரிட்ஜெட்ஸ் கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். 1949இல், டொனமூர் அரசியலமைப்பின் கீழ் முக்கியமானதொரு அமைச்சரும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி முழுவதும், சமூக அதிகாரப் படிநிலையின் சிகரமான குடும்பமொன்றின் பரம்பரையைச் சேர்ந்தவருமான, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவை சிறிமாவோ பண்டாரநாயக்க திருமணம் செய்தார். அமைச்சர் ஒருவரின், புதியதொரு கட்சித் தலைவரின், எதிர்க்கட்சித் தலைவரின் மற்றும் பிரதமரின் வாழ்க்கைத் துணையாக, 1940-1960இன் போது அவர் செயற்பட்டார். தனது கணவரின் அரசியல் சித்தாந்தங்களையும், குறிக்கோள்களையும் சாதிப்பதில் முக்கியமான பங்கொன்றையும் ஆற்றினார். 1959இல் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கடுந்துயரமான மரணத்தின் பின்னர், 1960 ஜூலை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தியதன் மூலம், சிறிமா பண்டாரநாயக்க விருப்பமின்றி தீவிரமான அரசியலில் பிரவேசித்தார். தேர்தலின் பின்னர், உலகின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவானதன் மூலம், சிறிமாவோ பண்டாரநாயக்க வரலாற்றில் இடம்பெற்றார்.. அவரது தீவிரமான அரசியல் வாழ்க்கை 50 வருடங்களுக்கு மேலாக நீடித்ததுடன், இக் காலத்தின் போது, மூன்று தடவைகள் (1960-65, 1970-77 மற்றும் 1994-2000) பிரதமராகவும், இரு தடவைகள் (1965-70, 1989-1994) எதிர்க்கட்சித் தலைவராகவும், அத்துடன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராகவும் விளங்கினார்.
இலங்கையில் காலனித்துவத்தைக் களையும் இரட்டை வரலாற்றுரீதியிலான பணிகளையும், காலனித்துவத்திற்குப் பிந்திய அரசாங்கத்தைக் கட்டியெழுப்பும் நடைமுறைகளையும் கவனிப்பதில் அவரது வகிபங்கின் பின்னணியில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையிட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டும். 1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவினால் வழிநடத்தப்பட்ட அரசியல் கூட்டணியின் (மக்கள் ஐக்கிய முன்னணி-MEP) வெற்றியின் பின்னர், காலனித்துவத்தைக் களையும் நடைமுறையானது, அதாவது காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை மீள்சீரமைத்தல் புதியதொரு கட்டத்தை அடைந்தது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக-கலாசாரத் துறைகளில் காலனித்துவத்தை களைதலை முன்கொண்டு செல்வதற்கு கருவியொன்றாக அரசாங்கத்தையும், அரசாங்கத்தின் அதிகாரத்தையும் புதிய ஆட்சி பயன்படுத்தியது. 1959இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொலையானது தலைமைத்துவ வெற்றிடமொன்றை உருவாக்கியது. இந்த முக்கியமான அரசியல் சந்தர்ப்பத்தில், தனது காலஞ்சென்ற கணவரின் முடிக்கப்படாத பணிக்காகவும், அரசியல் மரபுரிமையைப் பேணுவதற்காகவும் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்க முன்வந்தார். பிரதமராக அவரது முதலாவது கட்டத்தின் (1960-65) போது, தேசியமயமாக்கல் நடைமுறையானது முழு ஆர்வத்துடன் தொடர்ந்தது. நாட்டின் பொருளாதார விவகாரங்களில் அரசாங்கத்தின் வகிபங்கினைப் பலப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் “வெளியகச்” சக்திகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அத்துடன் மீள்-பங்கீட்டிலான நீதியை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு தொடரிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. பிரதமராக இரண்டாவது கட்டத்தில் (1970-77), அரசாங்கத்திற்கு ஓர் அடித்தளத்திலான சிந்தாந்தத்தைக் குறித்தொதுக்குதல், நிறுவனரீதியிலான கருவிகளைக் கட்டியெழுப்புதல் அத்துடன் மேற்படி இரண்டுக்கும் அமைவாக பௌதீக மற்றும் மனிதத் தளத்தை விருத்திசெய்தல் என காலனித்துவத்திற்குப் பிந்திய அரசாங்கத்தைக் கட்டியெழுப்பும் நடைமுறையின் மூன்று முக்கியமான அடிப்படைக் கொள்கைகளைக் கவனிப்பது மீது அதிகளவு வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சியில், அனேகமாக தேசிய ஒன்றிணைப்புக்கு தாழ்வு ஏற்படும் விதத்தில் எதிர்-காலனித்துவத்திலும், மீள்பங்கீட்டு நீதியிலும் முன்னுரிமை விளங்கியது. காலனித்துவ எஜமானுடனான அரசியலமைப்புத் தொப்புள் கொடியை அறுத்தெறிந்த 1972இன் முதலாவது குடியரச அரசியலமைப்பானது அவரது தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட காலனித்துவத்திற்குப் பிந்திய நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் நடைமுறையின் விளைவொன்றாகும். 1972-75 காலத்தில் அமுலாக்கப்பட்ட காணிச் சீர்திருத்தப் பொதியானது காணியின் உரிமைத்துவத்திற்கு உச்சவரம்பை முன்வைத்ததுடன், ஸ்ரேர்லிங் கம்பெனிகளுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றதுடன், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணியின் நிருவாகத்திற்காக ஒரு தொகையிலான அரசாங்க நிறுவனங்களும் தாபிக்கப்பட்டன. நாளாந்தப் பொருளாதார விவகாரங்களில் அரசாங்கத்தின் வகிபங்கின் விஸ்தரிப்பானது அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்கு கணிசமான உயர்ச்சியை வழங்கியது. இந்த நடவடிக்கைகள் 1956இல் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் நடைமுறையைச் சுருக்கியது.
அவரது அடையாளம் உறுதியாகப் பதிவாகிய இன்னொரு துறையாக வெளிநாட்டுக் கொள்கை விளங்கியது. தனது காலஞ்சென்ற கணவரினால் முன்வைக்கப்பட்ட கொள்கைத் திட்டவரை மீதான அடிப்படையில், சர்வதேச புகழை ஈட்டும் விதத்தில் புதிய உயரங்களுக்கு இலங்கையின் நடுநிலைமையிலான வெளிநாட்டுக் கொள்கையை அவர் விருத்திசெய்து, மேன்மையுறச் செய்தார். உலகளாவிய பனிப்போர் அதிகாரக் கூட்டணிகளுக்கு எதிரெதிராக நடுநிலையாகத் தொடர்ந்தும் இருந்த அதேவேளை, அவரது தலைமைத்துவத்தின் கீழ் உலகளாவிய அரங்குகளில் தமது பங்கிடப்பட்ட அக்கறைகளை முன்னெடுத்துச் செல்வவதற்கு சக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இலங்கை அடையாளங் காணப்பட்டது. இந்து சமுத்திரத்தில் வளர்ச்சியுறும் வல்லரசுக் கடற்படைப் போட்டியின் பின்னணியில், ஐக்கிய நாட்டில் இந்து சமுத்திர அமைதி வலய முன்மொழிவை சிறிமாவோ பண்டாரநாயக்க வழிநடத்தினார். மேலும், இலங்கையின் தேசிய அக்கறைகளை அதிகரிப்பதற்காக பயனுறுதிவாய்ந்த தென் ஆசிய கொள்கையை அவர் பின்தொடர்ந்து சென்றார். இந்தியாவுடன் பலமானதும், இணக்கமானதுமான உறவுகளைப் பேணிய அதேவேளை, ஏனைய ஆசிய சக்திகளுடன், விசேடமாக சீனாவுடனும், அரபு உலகத்துடனும் சம அளவில் பலமான தொடர்புகளை அவர் விருத்தி செய்தார். இதனால் பரந்த அளவிலான சூழ்ச்சி முறைத்திட்டத்தை இலங்கை கொண்டிருந்தது.
அவர் அதிகாரத்தில் இல்லாத போது கூட, அவரது தலைமைத்துவத் தகுதிகள் இன்னும் மேலும் தோற்றமாக விளங்கின. எதிர்க்கட்சித் தலைவராகவும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராகவும் அவரது வகிபங்கு சீரியதாகும். 1977 தேர்தல் தோல்வியின் பின்னர் அவர் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்தார். பெருமளவு அரசியல் சூறாவளிகளுக்கு மத்தியில், மாற்று அரசியல் கோலொன்றாக ஸ்ரீ.ல.சு.கட்சியை அவர் தாங்கிப்பிடித்தார். அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் அவர் ஒரு பலமான ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார். பிரதமராக அவரது காலத்தின் போது இலங்கையின் அரசியல் ஒழுங்கு முகங்கொடுத்த இரு சவால்களை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதன் மூலம் அது பிரதிபலிக்கின்றது. இதில் முதலாவதாக விளங்குவது உயர்பதவியிலான இராணுவ அலுவலர்களிலான 1962 இராணுவச் சதிப்புரட்சி, இரண்டாவது 1971 ஏப்ரல் இளைஞர் கிளர்ச்சி. மிகவும் அடக்குமுறையிலான அரசியல் நிலைமையின் கீழ் கூட, மக்களிலும், ஜனநாயக அரசியல் நடைமுறையிலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. நடைமுறையிலான அரசியல் தலைவர் ஒருவராக, இணக்கப்பாடுகளினதும், இசைவுபடுத்தலினதும், ஊடாக அரசியல் கூட்டணிகளை அமைப்பதற்காக வேறு அரசியல் கட்சிகள் மேலாக வெற்றியீட்டுவதற்கான தனது ஆற்றலளவை அவர் எடுத்துக்காட்டினார். தனது மரணத்திற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன், 2010இல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தமையே அவரது கடைசியிலான நடவடிக்கையாகும்.
அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், பெருமளவு பதவிநிலைகளில் மத்திய அரசியலில் அவர் முக்கியமான வகிபங்கொன்றை ஆற்றினார். சகலவற்றுக்கும் மேலாக, அவரது மனிதத்தன்மையே பண்டாரநாயக்க சீமாட்டியின் மிகவும் உயர்வாக மதிக்கக்கூடிய தகுதியாகும். கடைசிக் கட்டத்தில் வயது மூப்பிலான அரசியல் சான்றோன் என்ற வகிபங்கொன்றை அவர் ஆற்றியதுடன், அரசியல் நிறத்திற்கு அக்கறையின்றி பலருமே ஆலோசனைக்காகவும், ஆறுதலுக்காகவும் அவரிடம் வந்தனர்.
அவர் இரு மகள்மாரினதும், ஒரு மகனினதும் தாயாவார். அவரது மூத்த மகள் சுனேத்ரா பிறவற்றுள் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுடன் பணியாற்றும் சமூக ஊழியர் ஒருவராக தனது பெயரைப் பொறித்துள்ளார். இரண்டாவது மகள் சந்திரிகா நாட்டின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக விளங்கியதுடன், இரு தவணைகள் சேவையாற்றினார். அவரது மகன் அனுர அமைச்சரவை மந்திரியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அத்துடன் சபாநாயகராகவும் விளங்கினார்.