• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

19 ஜூன் 1963 – தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது அடக்குமுறைக்கு எதிரான கவலை

தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது காட்டபடும் பாரபட்சத்திற்கெதிராக ஜக்கிய நாட்டிலே கவலை தெரிவிப்பதில் எடுக்கபட்ட முயற்ச்சியில் இலங்கை பிரதான காரணியாக இருந்தது. இக்கொடுமைகளுக்கெதிராக உலகளாவிய கருத்தை ஒன்றுதிரட்டிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேரு, பர்மாவின் தலைவர் ஜெனரல் நெவின், லாவோஸின் பிரதமர் இளவரசர் சுவானா பூமா, கம்போடிய தலைவர் இளவரசர் சியானுக், ஜப்பான் பிரதமர் இகேடா, தாய் பிரதமர் தனாராட் மற்றும் நேபாள மன்னர் மஹேன்திரா போன்றோருக்கு கடிதம் எழுதி, தெற்கு வியட்னாமில் பௌத்தர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய தேவையான இராஜதந்திர முயற்சிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு உலக தலைவர்களுடைய ஆதரவை பெற்று, வியட்னாமில் பௌத்தர்களுக்கு வழிபாடு சுதந்திரத்தையும் சமய ரீதியான சமதுவத்தையும் உறுதி செய்ய உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கெணடி அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.