அணு பரிசோதனைகளுக்கு எதிராக உலக அபிப்பிராயத்தை திரட்டும் நிலைபாட்டில் இருந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியட் ரஸ்யா போன்ற நாடுகள் அணு பரிசோதனை தடை ஒப்பந்தத்தை தொடக்கி வைத்ததை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மிகவும் வரவேற்றார். “இது உண்மையிலேயே உலக சமாதானதிற்கான பாதையில் முக்கியமான முதல் காலடியாகும். எங்களின் உண்மையான எதிர்பார்ப்பின் படி, இந்த உடன்படிக்கை மூலம் அணு பரிசோதனைகளுக்கு பூரண தடை ஏற்படுமானால், இது இரண்டாவது உலக யுத்ததிற்கு பின்பு எடுக்கப்பட்ட சமாதானதிற்கான மாபெரும் முக்கியமான நடவடிக்கையாக வரவேற்பளிக்கப்படும். மூன்று வல்லரசுகளினால் ஈட்டிய இந்த சாதனையூடாக சர்வதேச ரீதியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய யுகத்திற்கு வழிவகுப்பதுடன் முழுமையான அணு ஆயுத தடைகளுக்கு வழிவகுக்கும் மேழும் பல சாதனைகளை அடைவதற்கும் உதவும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.” என இத்தறுவாயையிட்டு வெளியிட்ட அறிக்கையில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் குறிபிட்டார்.