1988 டிசெம்பர் 19 திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்ததுடன், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது வேட்பு மனுகளை சமர்பித்ததுடன் முதல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிட்டம்புவையில் ஆரம்பித்து வைத்தார். திரும்பவும் பிரதான அரசியலுக்கு பிரவேசித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் நாடு பூராவும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுப்பட்டார். இந்த ஜனாதிபதி தேர்தல் களத்தில் இவருடன் மூன்று வேட்பாளர்கள் இருந்ததுடன் மற்றைய வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரனசிங்க பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி சார்பாக ஒஸ்வின் அபேசேகரவும் போட்டியில் இரங்கிருந்தனர்.